சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டிற்கு தயாராகிறது யாழ் குடாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், யாழ் குடாநாட்டிலும் இதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.

SLFP

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று பிரதான கட்சியாக எழுச்சியடைந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு யாழ் குடாநாடும் தயாராகி வருகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் இதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றார்.

இதன் முதல் அங்கமாக யாழ் குடாநாட்டின் முக்கிய வீதிகள் யாவும் நீலவர்ண கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் குருணாகலையில் இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor