சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எழவேண்டும் என்கிறார், சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர்

K-Jesenthanசிறிலங்கா சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எல்லா வகையான அபிவிருத்தியையும் பெற்று எழ வேண்டும் அதற்காக அவர்களுக்கே வாக்களித்து வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம் என சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் கா.ஜெசிதன் தெரிவித்தார்.

வடமாகாண தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் அதுபோல விழுத்தியவன் தான் விழுந்தவனை தூக்கவேண்டும். எனவே ஆளுங்கட்சிக்கு வாக்களித்து வெற்றிகளைப் பெற்றுக் கொள்வோம்.

இதுவரையும் வேலையில்லாப்பட்டதாரிகளாக இருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டகாலமாக இருந்து வந்த வேலையில்லாப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது. 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாம் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் நிறைய தேவைகள் உண்டு. இவை அனைத்தும் இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சியாலேயே செயற்படுத்த முடியும். எனவே அனைவரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து அவர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.