சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து பேரை காணவில்லை எனவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அசாதாரண காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 61,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இரத்தினபுரி,கண்டி,காலி,மாத்தளை,பதுளை, ஹம்மாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்துள்ளதால் பாரிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.