சீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் குழு யாழிற்கு விஜயம்

china-flagசீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் (ZHOU QUIG) தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பலாலிக்கு இன்று வந்த சீன பிரதிப்பாதுகாப்பு செயலர் குழுவினர் பலாலியில் இருந்து வானூர்த்தி மூலம் இன்று காலை 10.30 மணியளவில் துரையப்பா விளையாட்டரங்கினை வந்து இறங்கினர்.

சீன பிரதிப்பாதுகாப்புச் செயலாளர் குழுவினரை 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல வரவேற்றார்.
அதன்பின்னர் சீன பிரதிப்பாதுகாப்பு செயலளர் தலைமையிலான குழவினர் யாழ். ஒல்லாந்த கோட்டையினையும் பார்வையிட்டனர்.

அதன்பின்பு வானூர்தி மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவில்Mr. Gao lang , Mr. Zhou quig, Mr. Lixi ng ang ngang, Ms. Zhu feng, Mr. Wang ziqing, Mr. Wang guan junஆகியோர் அங்கம் வகித்தனர்.

Related Posts