யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இன்று மதியம் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணம் வந்த கமலேஷ் சர்மா வடக்கு ஆளுநரைச் சந்தித்தபின் சிவில் பிரதிநிதிகளை மதியம் சந்தித்து கலந்துரையாடினார்.
எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் பாதிரியார்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த சிவில் பிரதிநிதிகள் என சொல்லக்கூடிய அளவில் எவரும் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் குறித்த சந்திப்புக்கு அதிகளவானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பு இரகசிய சந்திப்பாக இருப்பதனால் ஊடகவியலாளர்களுக்கு செய்தியை எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் செயலரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை. மாறாக வெளியில் வரும் போது புகைப்படம் மாத்திரம் எடுக்க முடியும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து கேட்க முடியாது எனவும் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.