சிவில் பாதுகாப்பு விருந்தினர் விடுதி திறப்பு

பாதுகாப்பு அமைச்சின் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவால், விஸ்வமடுவில் நிர்மாணிக்கப்பட்ட விருந்தினர் விடுதி நேற்று திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு படைகளின் பொறுப்பதிகாரி றியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ், இந்த விருந்தினர் விடுதியை திறந்து வைத்தார்.

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் 2 ஆவது ஆண்டு நிறைவையொட்டியே இந்த விருந்தினர் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழுவிலுள்ளவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழுவின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.