சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு இல்லை

சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எவரும் கலந்துகொள்ளவில்லை.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகாந்தன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், பிரதேச செயலர்கள், ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.