Ad Widget

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு 1290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 1202 முறைப்பாடுகள் தேவையற்றது என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவற்றில் சிறுவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள், சர்வதேச பாடசாலைகளின் கட்டணப் பிரச்சினைகள், வீடு, காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பிரச்சினைகளை முறையிடும் சந்தர்ப்பங்கள் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகளை மாத்திரம் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related Posts