சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை ஒழிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட பெண்கள் என்னும் அமைப்பின் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மெற்கொள்ளப்பட்டது.
யாழ். பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டமானது, வைத்தியசாலை வீதி வழியே கண்டி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது.
இதன்போது யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இம் மனுவானது ஆளுநர் சந்திரசிறி, சிறுவர் அவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, மாநகர மேயர் பொலிஸ் மா அதிபர், உள்ளிட்ட பலருக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.