சிறுமி கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வயோதிப பெண் கைது

arrest_115 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று வல்லை வெளியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வயோதிப பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். நல்லூர் கொண்டலடி பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை நல்லூர் பகுதியில் வைத்து மூன்று பேர் கொண்ட குழுவினர் முச்சக்கரவண்டியில் நேற்று கடத்தி சென்றுள்ளனர்.

கடத்தி சென்ற கும்பலில் பெண்ணொருவர் உட்பட இரு ஆண்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த குழுவினர், சிறுமி அணிந்திருந்த சங்கிலி, தோடுகள் நகைளை பறித்து விட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இடத்தில் வைத்து சிறுமியை தூக்கிய வீசிவிட்டு சென்றுள்ளனர்
.
கடத்தி சென்று தூக்கி வீசப்பட்ட சிறுமி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணை யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிப்பட்ட பகைமை காரணமாகவே குறித்த சிறுமி கடத்தப்பட்டிப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தித் தாக்குதல்!- வல்லை வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு