சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை!

boys-fight-cartoonயாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிக்கு தனிமையில் கட்டுடை பிரதேசத்திலிருந்து சென்று கொண்டிருந்த சிறுமியை துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவர் அவரைப் பற்றை ஒன்றிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு முயற்சித்துள்ளார்.

குறிதத் சிறுமி கதறியதால் அயலிலுள்ளவர்கள் இந்த முதியவரைத் துரத்திப்பிடித்து பனை மரத்துடன் கட்டி வைத்து பச்சை மட்டையினால் தாக்கியுள்ளனர்.

இதன் போது முதியவரின் கை எழும்பு முறிவடைந்துள்ளதுடன் அவருக்கு உடம்பில் பல பகுதிகளிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முதியவர் தொடந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.