இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிறுநீரக மாற்று மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும் இதற்கான தொடர்பாடல் சாதனமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தியாவின் ஹைதராபத் நகரில் நேற்று 4 நோயாளிகளும், ஒரு வைத்தியரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், 2 மடிக் கணினிகள், 6 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் சிறுநீரக மோசடிகள் இடம்பெறுகின்றன என முன்னரும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இந்நிலையிலேயே நேற்று ஹைதராபாத்தில் ஐவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு ஒரு சிறுநீரகம் மாற்றுபவரை தொடர்புபடுத்துவதற்கு 50 ஆயிரம் இந்திய ரூபா தரகுப் பணமாக வழங்கப்பட்டது என அந்தச் செய்திகள் தெரிவிக்கிறன.
சிறுநீரகம் வழங்குபவருக்கு 3 இலட்சம் இந்திய ரூபா வழங்கப்படுகின்றது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.