சிறுநீரகக் கோளாறு காரணமாக 49 பேர் உயிரிழப்பு

Jaffna Teaching Hospitalஇந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சிறுநீரகக் கோளாறு காரணமாக 148 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்த 49 பேரில் 32 ஆண்களும் 15 பெண்களும் 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

எஞ்சிய 99 பேரும் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.