சிறார் காலம் தொடர்பில் அக்கறை அவசியம்

பிள்ளைகளை புரிந்து, அவர்களது சிறார் காலம் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

mahintha

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, எமது நாடு கைப்பற்றியுள்ள வெற்றிகளின் உரிமையாளர்கள் சிறார்களே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம் கொண்டாடப்படும், முதியோர் தினம் தொடர்பிலும் ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள முதியோர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்குதாரர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று கொண்டாடப்படும், சிறுவர் தினத்திற்காக பிரதமர் டீ.எம் ஜயரட்ண அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொழிலில் ஈடுபடும் சிறுவர்களை மீட்பது உள்ளிட்ட சிறுவர்களுக்காக இலங்கை மேற்கொள்ளும் செயற்பாடுகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.