சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக யுவராஜ் தெரிவு

uvaraj2013ஆம் ஆண்டிற்கான யாழ்.மாவட்ட சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக இ.யுவராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தெரிவினை இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.

கடந்த ஒரு வருட காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத் திட்டங்கள், நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட வேலைத்திட்டங்கள், தலைமைத்துவ பண்புகள் உட்பட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 25 மாவட்டங்களில் இருந்தும் சிறந்த தேசிய இளைஞர் சேவை அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிகிழமை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது யாழ்.மாவட்ட சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்ட இ.யுவராஜ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.