மாகாண சபையினை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும் எனவும் மாகாண சபையினை செயற்பட வைக்க முடியாவிட்டால், அந்த மாகாண சபை தேவையில்லை என கூறமுடியும் எனவும், முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சக்திகள் மற்றும் சிங்கள மற்றும் ஏனைய சமூகத்தினரும் இணைந்து பேச்சு நடத்தி மாகாண சபைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் வடகிழக்கு முதலமைச்சரின் “அனுபவ பகிர்வு” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வைமன் வீதியில் அமைந்துள்ள ஆறுதல் நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் (19) மாலை நடைபெற்றது.
அதன்போது, வடகிழக்கு முதலமைச்சராக இருந்த அனுபவத்தினைப் பகிரும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் மாகாண சபைகள் உருவாகுவதற்கு இந்தியா காரணமாக இருந்தாலும், மாகாண சபைக்குள் இருக்கும் அதிகாரங்களை குறித்து கரிசனை கொள்ளாது என நினைக்கின்றேன் என்றார். அத்துடன், மாகாண சபைகளில் உள்ள குறைபாடுகளிற்குள் இந்தியா தலையிட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதாவது வடகிழக்கு மாகாணங்களின் அதிகாரங்களை பற்றி உள்நாட்டிற்குள் ஆராய்வதே மிகச்சிறந்தது. இதன் மூலமே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பெற முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினர்.
மாகாண சபையினை செயற்பட வைக்க முடியாவிட்டால், அந்த மாகாண சபை தேவையில்லை என கூறமுடியுமென்பதுடன், ஜனநாயக சக்திகள் மற்றும் சிங்கள மற்றும் ஏனைய சமூகத்தினரும் இணைந்து பேச்சு நடத்தி மாகாண சபைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
சர்வதேசங்கள் 13வது திருத்தத்தினை உடனடியாக நிறைவேற்று என கூறினாலும், 13 திருத்த சட்டத்தில் உள்ள என்ன விடயத்தினை நிறைவேற்று என கூறமாட்டார்கள். அந்த 13வது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு உள்நாட்டிலேயே பேசி நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மாகாண சபைகள் சிறப்பாக இயங்குவதற்கு புறச்சூழல் அவசியமானது, இந்த புறச்சூழல் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்தில் மிகச்சாதகமாக இருந்தது. துற்போது சாதகமான புறச்சூழல்கள் காணவிட்டாலும், வேறு விதமான புறச்சூழல்கள் காணப்படுகின்றன. அவற்றினை ஆராய்ந்து, மாகாண சபைகள் சிறப்புற நடப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான சாதமான சூழல்களைப்பயன்படுத்தி மாகாண சபை முறைமைகளை மாற்றி அமைக்க வேண்டும். முடியாதது ஒன்றுலை.மில் மனமுன்டானால் இடமுண்டு என்றும் இந்த இடத்தினை வரவழைக்க முயற்சிக்க வேண்டுமென்றும் தனது அனுபவத்தினைப் பகிர்ந்தார்.