கிளி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்த கோவில் கட்டுமானப்பணி உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பது உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் தீவிரமாகியுள்ள பௌத்த சிங்கள மயமாக்கல் நோக்கில் ஸ்ரீலங்கா அரசினால் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு சார் இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (22-8-2016) நடைபெறும் நடைபயணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேற்படி நடைபயணம் ஆணையிறவு உமையாள்புரம் அம்மன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி ஐ.நா அலுவலகம் நோக்கி செல்லவுள்ளது. மேற்படி பேரணியில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.