சிங்கள இனவாத கட்சிகளை புறக்கணிப்போம்

manikkarasothy-abimanuசிங்கள இனவாத கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் வட மாகாண சபை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று சுயேட்சைக்குழு வேட்பாளரான மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இந்த இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக எமது இனத்தின் அழிவுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் சுதந்திர கட்சி முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

இதனால் மஹிந்தவை நாங்கள் நேரடியாக அடிக்க முடியாது. தேர்தலில் நாங்கள் அழிக்கும் புள்ளடிகள் மூலமே அவரின் கட்சிக்கு பாடம் புகட்ட முடியும். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு நிறுத்தப்பட்டுள்ள குறித்த கட்சிகளின் வேட்பாளர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்’ என்றார்.