அடையாள அட்டைகளில் தமிழில் விபரங்கள்! 2014 முதல் அமுல்

NIc2014ம் ஆண்டு முதல் வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ், சிங்கள ஆகிய இரண்டு மொழிகளில் பெயர் விபரங்கள் இடம்பெற செய்யப்படும் என இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.

2016 ம் ஆண்டில் இருந்து அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் சரத் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புதிதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் மாத்திரமே இரண்டு மொழிகளில் விபரங்கள் இடம்பெறச் செய்யப்படும் எனவும், 2016ம் ஆண்டு வரை இந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் இரண்டு மொழிகளில் விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

எவ்வாறாயினும் 2016ம் ஆண்டில் இருந்து அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor