உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை விரைவில் நாடு திரும்பவுள்ளார் என மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூன்று மாதங்களாக சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையை தற்போது இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.