சிகிச்சை பெறும் முதலமைச்சரை சந்தித்தார் ராஜித

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வியாழக்கிழமை (07) சந்தித்து நலம் விசாரித்தார்.

rajitha-jaffna-hospital

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அவசியம் என்ற வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொhண்ட பின் வைத்தியசாலையின் இருதய சிகிச்சை தொழில்நுட்ப பிரிவை பார்வையிட்டதோடு இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வடக்கு முதல்வரையும் சந்தித்து நலம் விசாரித்து சென்றுள்ளார்.

Related Posts