சிகிச்சை பயனின்றிச் சிறுவன் சாவு

வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான்.

யாழ்.அரசடி வீதி, கந்தர்மடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கோபிசன் (வயது-03) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் தந்தை ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்திலிருந்து பயணித்த போதே சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.

மேலும் இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor