சிகிச்சைப் பலனின்றி மூதாட்டி பலி

யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மூதாட்டி, சிகிச்சைப் பலனின்றி நேற்று வியாழக்கிழமை(26) உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி மருமகனின் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாலத்தின் தடுப்பு கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த மேரிமாக்கட் வயது(63) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மூதாட்டி யாழ்,போதன வைத்தியசாலையில் கடந்த 10 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

Related Posts