சாவச்சேரியில் தனித்து வாழ்ந்த பெண் வீட்டில் சடலமாக மீட்பு!

body_foundதனித்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் வீட்டு விறாந்தையில் சடலமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை சாவச்சேரி கல்வயல் சண்முகானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றது.

திருமணமாகாத இந்தப் பெண் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் நேற்றுக் காலை வீதியில் சென்றவர்கள் வீட்டு விறாந்தையில் நிர்வாணமாக சடலமாக கிடந்ததைக் கண்டு கிராம அலுவலர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டுப் பொருள்கள் விறாந்தையில் சிதறிக் காணப்பட்டுள்ளன.

திருட வந்தவர்கள் இவரைக் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்துச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இவரது சடலம் பொலிஸாரால் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இதே இடத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது-62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்தப் பெண் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.