சாவக்கச்சேரியில் தாக்குதல்; ஒருவர் காயம்

attack-attackசாவக்கச்சேரியில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச்சென்ற பஃவ்ரல் வாகனத்தை இடைமறித்த முகமூடி நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அந்த வாகனத்தின் சாரதியை தாக்கியுள்ளனர்.

இச்சம்வம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஆயுதம் தரித்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மற்றொரு சம்பவத்தில் தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.இதன்போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார்.இந்நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

இரண்டு வாகனங்களில் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.வாகனத்துக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சுமார் 15 – 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கண்ணாடிகள் உடைந்து வாகனளம் சேதடைந்துள்ளது.வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் அங்கு பதட்டநிலை ஏற்பட்டு சிறிது நேரம் வாக்களிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது