சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற பிரதேசசபைக் கூடத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருந்த சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் ஊடகவியலாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
இதற்கு மக்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளர். தகவல் உரிமைச்சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளபோதிலும், கூட்டத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை கண்டனத்துக்குரியதே எனப் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.