சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபம் திறந்துவைப்பு!

சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

chavakachcherei1

முன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

மண்டபம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.