சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள், நேற்று திங்கட்கிழமை (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர், கடந்த வாரம் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி சிகிச்சைக்கு கொண்டு சென்றவர்கள், வைத்தியசாலையில் நின்றவர்களுடன் முரண்பட்டு, அங்கு கடமையாற்றும் சிற்றூழியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.