சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 6 வைத்தியர்கள் நியமனம்

அண்மையில் உள்ளக பயிற்ச்சிகளை முடித்துகொண்ட வைத்தியர்கள் 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுக்கொண்ட ஒரு வைத்தியர் உள்ளடங்கலாக 6 வைத்தியர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தமது கடமைகளை பொறுப்பேற்று உள்ளனர்.

chavakachcheri-hospital

வைத்தியர் நிலுஜா,வைத்தியர் புவனேஸ்வரன்,வைத்தியர் ஜெயரத்னே,வைத்தியர் ரிஷான், வைத்தியர் சத்தியயினி, வைத்தியர் ஸ்கந்தராஜா ஆகியோரே புதிதாக கடமையை பொறுப்பேற்று கொண்ட வைத்தியர்கள் ஆவார்கள்

மேலும் ஒரு தொகுதி வைத்தியர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து இடமாற்றம் பெற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு செல்ல உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விரைவில் சுகாதார அமைச்சுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி குறுகிய காலத்தில் குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரை நியமிக்க உள்ளது.

மேலும் மாகாண சுகாதார அமைச்சு அங்கு சத்திர சிகிச்சை கூட வசதிகளை ஏற்படுத்துமிடத்து அங்கு சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரையும் நியமிக்க உரிய சிபாரிசுகளை செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் ஆர்வமாக உள்ளது .தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணர் ஒருவர் மட்டுமே கடமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts