சாவகச்சேரியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

dead-footசாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை 3மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் இச்சம்பவத்தில் கூலி தொழிலாளியும் 3பிள்ளைகளின் தந்தையுமான ஏகாந்த ரூபன் பத்மநாபன்(வயது 45)என்பவரே தற்கொலை செய்து
உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது

தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் மூத்த மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுள்ளார்.இதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து வீட்டுக்கு வெளியிலே அவர் உறங்குவது வழக்கம் அதே போல நேற்றும் குடிபோதையில் வந்து வெளியிலே உறங்கினார் காலை எழுந்து பார்க்கையிலே அவர் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இறந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.