சாரதிகளுக்கு வீதி விழிப்புணர்வு

வடமாகாண சபை மற்றும் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஒழுங்கமைத்த பாதுகாப்பான சாரத்தியம் மற்றும் வீதிப் போக்குவரத்து சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.ஸ்ரான்லி கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பான சாரத்தியம் மற்றும் வீதிப் போக்குவரத்து சட்டங்கள் பயற்சி மதிப்பீடு,விபத்துக்களுக்கான காரணம் மற்றும் விபத்துக்களை குறைப்பதற்கு மாற்று நடவடிக்கை தொடர்பாக சாரதிகளுக்கான வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் அவர்களை விழிப்பூட்டும் பயிற்சியை ஓய்வு பெற்ற போக்குவரத்து பிரதி பொலிஸ்மா அதிபர் த.பேரின்பநாயகம் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி துறை இயக்குனர் சிவராஜலிங்கம்,வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.