இந்து பௌத்த கலாசார பேரவையின் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (14) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 580 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து பௌத்த கலாசார பேரவையில் இதுவரை 6,000 பேர் கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளனர்.
இக் கற்கை நெறிக்கு இவ்வருடம் 1.600 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.