சாதாரண நோயாளர்களுக்கு வைத்திய சாலைக்கு வந்து சிகிச்சை பெற முடியும் – த.சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும்கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தற்சமயம் ஓரளவு குறைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றது.

வைத்தியசாலையின் கொரோனா விடுதிகளில் நாளொன்றுக்கு 30 க்கும் குறைவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் கொரோனா பரவல் அபாய நிலைமை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லாத சாதாரண நோயாளர்கள் மற்றும் நோய்களுக்காக மருந்துகளைப் பெற்றுக் கொண்டிருப்போர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளைப் பெற முடியும் என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor