இந்த வருடம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் 4 இலட்சம் மாணவர்கள் வரை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சுட்டிக்காட்டிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார, இதுவரை இரண்டு இலட்சம் மாணவர்கள் மட்டுமே அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், குறிப்பிட்டார்.
இதன்படி இரண்டு இலட்சம் மாணவர்கள் வரை விண்ணப்பங்களை அனுப்பாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறு, ஆணையாளர் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார கோரிக்கை விடுத்துள்ளார்.