காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்று சாவகச்சேரி பிரதேச செயகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்படி சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள கிராமசேவகர் பிரிவில் இருந்து 13 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இன்றைய தினம் சாட்சியப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.
மேலும் 16,17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 8 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு மாவட்டச் செயலகத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இருந்து 49பேர் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
கருணா குழு எனக்கூறியே மகனை கடத்தினர், தாய் சாட்சியம்
கண்ணீரால் கரைந்த கோப்பாய் பிரதேச செயலகம்
கணவரை இராணுவத்தினரிடமே ஒப்படைந்தேன் அவரை மீட்டுத் தாருங்கள்,ஆணைக்குழுவின் முன்னால் ஒலித்த குரல்