சரத் பொன்சேகா விரைவில் யாழ்ப்பாணம் விஜயம்

முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவருமான சரத்பொன்சேகா யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.

இவ் விஜயத்தின் போது நல்லுார் கந்தனை தரிசிப்பதுடன் மக்கள் சந்திப்புகளிலும்  அவர் பங்கேற்பார்.அத்துடன் இறுதி யுத்தம் நடைபெற்ற இடங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.

அவரது வடபகுதி விஜயம் குறித்து துணைவியார் அனோமா பொன்சேகா கூறுகையில் வடக்கு மக்களை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறக்கவில்லை. ஏனெனில் வடக்கு மக்கள் கூடுதலானோர் ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவை ஆதரித்துள்ளனர்.

நல்லுார் உட்பட பல மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் செல்லவுள்ளார் அத்துடன் வடக்கில் வாழும் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து பேசவும் உள்ளார்.

 

 

Related Posts