சம்பள அதிகரிப்பின்றேல் பகிஷ்கரிப்பு : அரச மருத்துவ ஊழியர்கள் சங்கம்

சம்பள வீதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், போக்குவரத்து மற்றும் ஏனைய விசேட படிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் விரைவில் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.அரச சேவையில் மருத்துவ வாண்மையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக, அவர்களின் சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல வருடங்களாக தான் கோரி வருவதாகவும் ஆனால் அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.