சம்பந்தனுக்கு எதிராக சுவரொட்டிகள்

notes-sambanthanஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற அமைப்பே இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணன் மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா?, சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?, சம்பந்தன் ஐயா சகலதும் தெரிந்த நீங்கள் சடுதியில் மாறியது ஏன்?, சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு?, மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி நகரிலும் இது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி எனும் பெயரிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பசியில் இருந்த போதும் சிறையில் இருந்த போதும் எமக்காய் உருகிய மாவை அண்ணணை எப்படி மறப்போம்?, சம்பந்தன் ஐயா உங்கள் முதலமைச்சருக்கு கோணாவிலும் கேப்பாபுலவும் எங்குள்ளது என்று தெரியுமா?, நாங்கள் துன்பப்பட்ட போது விக்கினேஸ்வரன் ஐயா எங்க போனவர்? போன்ற வாசங்கள் இந்த சுவரொட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor