சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்வு!

paddam-kyteசமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில் இன்று (19) மாலை 4 மணியளவில் பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வினை தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, ஐக்கிய நாடுகளின் தன்னார்வ நிகழ்ச்சித்திட்டம் இலங்கை பட்ட அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் சிங்கள கலாசார நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் மூவின பாரம்பரிய உணவுப்பரிமாற்ற நிகழ்வு ஆகியன இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.