சமுர்த்தி மற்றும் வாழ்வின் எழுச்சி, துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க எதிர்வரும் 28ம் திகதி அவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்குச் சேரவேண்டிய பணம் 70,000 இலட்சம் ரூபாவை மீள அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.