சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Samurdhiசமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபைக்குள் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செலயங்களில் கடமையாற்றுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ். மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 321 பேருக்கான நியமன கடிதங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் 15 பிதேச செயலகர்களிடமும் வழங்கி வைத்தார்.

அக்கடிதங்களை ஒவ்வொரு பிதேச செயலர்களினாலும் சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்நியமன கடிதங்களுடன் இன்று திங்கட்கிழமை ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் கடமைக்கு செல்லவுள்ளனர்.

இதன் போது, கள பயிற்சி முடித்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒவ்வருவரும் தமது கள பயிற்சியின் போது பெற்ற அநுபவங்களையும், விளக்கங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ரகுநாதன், உட்பட 15 பிரதேச செயலர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor