Ad Widget

“சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

“சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.நகரசபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வு யாழ்.படைத்தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வை ஆளுநர் அடங்கிய குழுவினர் மங்களவிளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விற்பனைக் கூடங்களையும் பார்வையிட்டனர். அத்துடன், பாதாள கிணற்றில் நிகழ்த்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாகசத்தை அவர்கள் பார்வையிட்டதுடன் சாகசத்தை நிகழ்த்தி வீரர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே ஏனைய வினோத விளையாட்டு நிகழ்வுகளிலும் குறித்த குழுவினர் பங்கெடுத்துக் கொண்டனர்.

26 ஏப்பிரல் 2013 அன்று ஆரம்பமாகிய “சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் குணவர்த்தன, மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன ஆகியோருடன் நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

newyear-carnevel

Related Posts