சத்தியப்பிரமாணத்திற்கு முன்னதாக அமைச்சர்கள் பெயர் விபரம் : சுரேஷ்

SURESHவடமாகாண சபை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு முன்னர் அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி உறுதியான விபரம் வெளியிடப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்கள் விபரங்கள் தொடர்பாக சுரேஷ் பிரமேச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களின் தெரிவுகள் தொடர்பாக தனக்கு இதுவரையிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தெரியவில்லையெனவும், சில பத்திரிகைகள் இது தொடர்பாக தன்னிச்சையான செய்திகளை பிரசுரிப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11ம் திகதி) அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களின் விபரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.