சண்டைக்கு ஆயத்தமாக வாள்களுடன் இருந்த 9 ரவுடிகள் சுன்னாகத்தில் கைது

வாள்களுடன் சண்டை ஒன்றுக்கு ஆயத்தமான 20 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள் உள்ளடங்கிய ரவுடிகளை சுன்னாகம் பொலிசாா் கைது செய்துள்ளனா்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக வாள்களையும் வேறு ஆயுதங்களையும் வைத்திருந்த 9 பேர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பொலிஸ் குழுக்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

underworld_group_vaal-Knife

வன்முறைகளில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வாள், கத்தி உட்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தவர்களே கைதாகியிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

வாள், கத்தி என்பவற்றைச் செய்யும் நபர் ஒருவர் முன்னதாக கைதானார் எனவும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பெருமளவானவர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

அவர்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிவரும் மாணவர்கள் பலரும் இடம்பெற்றிருக்கின்றனர் எனவும் பரீட்சையைக் கருத்தில் கொண்டு அவர்களை பொலிஸார் தற்போது கைது செய்யாது தவிர்த்திருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது.