சகல துறைகளினதும் செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் ஆராய்வு

வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதம செயலாளர், செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்களுடன் கலந்துரையாடலொன்று நெற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

npc-meeting

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் திரு தம்பிராசா குருகுலராசா, சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சர் திரு. பத்மநாதன் சத்தியலிங்கம், வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், முதலமைச்சரின் செயலாளர் திரு.எஸ்.திருவாகரன், ஏனைய செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

சகல துறைகளினதும் செயற்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பன ஆராயப்பட்டது. முக்கியமான துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அமைச்சர்களினால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் சகல நிதி மூலங்களின் கீழ் வரும் எதிர்கால வேலைத்திட்டங்கள், மாகாணத் திட்டமிடல் முறைகள், நியதிச் சட்டங்கள் தயாரித்தல் மற்றும் துறைசார்ந்த மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது.