கோண்டாவில் தாவடி முருகன் கோவிலில் நேற்று முன்தினம், ஆலயத்தின் கதவை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான பழமை வாய்ந்த மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளது.
மாலை பூசையை நிறைவு செய்து விட்டு ஆலயத்தைப் பூட்டிவிட்டு மறுநாள் காலை ஆலயத்தில் பூசை செய்ய வந்த வேளையில் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பொது மக்களும் பூசகரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், பல லட்சம் ரூபா பெறுமதியான சிலைகள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.