கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தான் வீதியால் சென்று கொண்டிருந்த போது மது போதையில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடத்தி சென்று வாகனத்தினுள் வைத்து கைத்துப்பாக்கியால் தாக்கி சில கிலோ மீற்றர் தூரம் கொண்டு சென்று வீதியில் வீசி விட்டு சென்றனர் என பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கோப்பாய் பொலிஸாரினால் மனிதவுரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விளக்கங்கள் கோரப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ள போதிலும் , கோப்பாய் பொலிசாரின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor