கோப்பாயில் இளைஞனைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு

missing personகோப்பாயைய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் மத்தி வெள்ளுருவப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய சிவலிங்கம் தவக்குமார் என்ற இளைஞரே காணாமற்போயுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை வீடுவந்து சேரவில்லை எனவும், அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

சிவலிங்கம் தவக்குமார் காணாமற்போனமை தொடர்பில் நேற்று இரவு 9 மணியளவில் தமக்கு முறைப்பாடு ஒன்று அவரது உறவினர்களல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞனது பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வருமாறு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த இளைஞர் காணாமற்போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor