Ad Widget

கோணேஸ்வரம் கோவிலில் கட்டுமானங்களுக்குத் தடை

தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சகல கட்டுமானங்களையும், உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்குப் பணித்துள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ், இந்தப் பாதுகாப்பு இடத்தில், 372 ஏக்கர் அடங்குகின்றது என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில், தொல்பொருளியல் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எச்.ஏ சுமணதாஸ தெரிவிக்கையில், இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்று மிகவும் இரகசியமான முறையில் கட்டப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts