கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது

arrest_1யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.

யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

நேற்று மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.